Saturday, 23 March 2013

என் கருத்து



அனைவருக்கும் எனது இனிய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்..இன்றைய முதன்மை  செய்தியாக அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் தெரிவிப்பது என்னவென்றால்..?
ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் மகத்தான போராட்டமே ஆகும். நல்ல, மேலும் மிகவும் மகிழ்ச்சியான செய்திதான். மாணவர்கள் அதுவும் தமிழ் நாட்டு மாணவர்கள் போராட்டம் நடத்துவது என்பது மிகவும் மகிழ்ச்சியான விசயம் அல்லவா..!

போராட்டத்தின் உச்ச கட்டமாக ஒரு சில மாணவர்கள் தீக்குளித்து தங்களது இன்னுயிரை ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்காக ஈந்துள்ளனர்.

இந்த போரட்டத்தில் இருந்து ஒன்று வெளிப்படையாக தெரிகிறது அது என்னவென்றால் மாணவர்கள் மத்தியில்... ஏன்..? இந்த போராட்டம் நடத்தும் அனைத்து மக்களிடமும் நாம் ஓர் தமிழன் என்ற உணர்வே மேலோங்கி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவரது மத்தியிலும் நாம் மனிதன் என்ற உணர்வு இல்லை. ஏன் அவ்வாறு கூறுகிறேன் என்பதர்க்கான காரணத்தை கீழே காண்போம்.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனப்படுகொலை இருக்கிறதே. அது இன்றும் எனக்குள் இந்த கேள்வியை கேட்க வைக்கிறது நீ ஜனநாயக நாட்டில், ஒரு சுதந்திர நாட்டில்தான் வசிக்கிறாயா..? என்பதுதான் அந்த கேள்வி.

எத்தனை உயிர்கள் அதுவும் ஒரு சுதந்திர நாட்டில், அமைதியால் வென்ற நாட்டில் இந்த கொடுமை நடந்துள்ளது.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கூறிய வார்த்தைகள் இவை
“இன்று இந்துகளை அவர்கள் போக்கில் விடுங்கள் அவர்களை கட்டுபடுத்தாதீர்கள் அவர்களை எதுவும் செய்ய விடுங்கள்” என்பதே ஆகும்.
தமக்கு மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களை காப்பாற்றாமல் அவர்களை கொலை செய்வதர்க்கு அனுமதி அளித்துள்ளார் ஒரு முதல்வர். சாதரணமாகவே படுகொலை செய்யும் மதவெறியர்கள், தடுப்பதர்க்கு ஆள் இல்லை என்பதை அறிந்தவுடன் குஜராத்தை ரத்தத்தால் நனைத்துவிட்டார்கள். ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் தங்கள் சொந்த மாநிலத்திலே அகதிகளாக அடைக்கப்பட்டனர்.

எப்படி சென்றால் தப்பிக்கலாம் என ஒரு கர்பினி பெண் காவல் துறையை சேர்ந்த ஒருவரிடம் கேட்டுள்ளார். தப்பித்து விட்டோம் என அவர் சொன்ன வழியில் சென்றுள்ளார் அந்த பெண்.  ஆனால் அங்கு தயாராக நின்ற மத வெறியர்கள் அந்த பெண்ணின் வயிற்றை கிழித்து அந்த குழந்தையை அவள் கண் முன்னே தீயிலிட்டு எரித்திருக்கிறார்கள். இத்தனை கொடுரமான கொலைகள் குஜராத்தில் நடந்து உள்ளன. மேலும் மத வெறியர்களுக்கு முஸ்லிம் மதத்தவரின் முகவரிகள் அடங்கிய குறிப்பு அரசினால் அளிக்கப்பட்டுவிட்டது அவர்கள் அதை வைத்து வீடு வீடாக சென்று தங்கள் கொலை வெறியை அடக்கியுள்ளனர். இவற்றிற்கு எல்லாம் மேலாக ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், அவர் கொல்லப்பட்டதுதான் மிகவும் கொடுரமானது. கலவரம் தொடங்க்கியவுடன் ஏராளமான முஸ்லிம் மக்கள் அவரது வீட்டிற்க்கு அடைக்கலம் தேடி வந்துள்ளனர். அவர்களை எல்லாம் அழைத்து பத்திரமாக வீட்டில் பூட்டி வைத்துள்ளார் அவர். ஆனால் அந்த மதவெறியர்கள் அவரையும் சேர்த்து உள்ளே வைத்து பூட்டி வீட்டிற்க்கு தீவைத்து அவர்கள் அனைவரையும் சாம்பல் ஆக்கிவிட்டனர்.

இவையெல்லாம் வேறு எங்கும் இல்லை.. நம் மதசார்பற்ற இந்தியாவில்தான். இதனை வெற்றிகரமாக நடத்தியது நமது அடுத்த பிரதமர் என அழைக்கிறோமே அந்த நரன் மோடிதான். இதுதானையா கொடுமையிலும் கொடுமை அவர் மட்டும் அடுத்த பிரதமர் என்றால் அத்தனை சிறுபான்மையினரும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும் அது மரணமாகவும் இருக்கலாம்...

இதர்க்கு அடுத்தபடியாக கயர்லாஞ்சியில் நடந்த கொடுரமான சம்பவம். தனக்கு சமமாக ஒரு தலித் வளர்கிறான் என தெரிந்ததும். ஊரே ஒன்று கூடி அந்த குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் அடித்தே கொன்றுள்ளனர். அதிலும் அந்த அப்பாவி சிறுவர்களை அவர்களது அம்மா அக்காவுடன் பாலியலில் ஈடுபடும்படி வற்புறுத்தியதையும், அவர்கள் மறுத்ததும் அவர்களது பாலியல் உறுப்பை கத்தியால் கிழித்ததையும் அங்கு நின்ற பெண்களே கேட்கவில்லை என்றால் அவர்களது சாதிவெறி எவ்வளவு கொடுரமானது என்ற எண்ணம் உண்டாகிறது.

அடுத்ததாக பரமக்குடி துப்பாக்கி சூடு. தேவர் சாதிக்கு இவர்கள் இனையாக வந்துவிடுவார்கள் என எண்ணி அமைதியாக நடந்த போராட்டத்தில் உயர் சாதியினரே கலவரத்தை உண்டாக்கி இவர்களே அந்த அமைதியான மக்களை அடித்து உள்ளனர். அந்த உயர்சாதியினர் வேறு யாறும் இல்லை. தமிழக காவல்த்துறைதான்.. இறந்தவர்களில் பலர் அந்த போராட்டத்தை வேடிக்கை கூட பார்த்தவர்கள் கிடையாது. சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தவர், அழைப்பிதல் அளிக்க வந்தவர், என எல்லோறும் அப்பாவிகள் ஆனால் அவர்களது ஒரே தவறு அவர்களது சாதிதான் அதனால்தான் இறக்க நேர்ந்தது.

இதன் தொடர்ச்சிதான் தேவர் குரு பூஜையின் போது நடந்த கொலைகள் ஆகும். ஆம் தங்களை அடித்தவர்களை பலி வாங்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் இவர்களும் பல மண்ணிக்க முடியாத கொலைகளை செய்தனர். பரமக்குடி சம்பவத்தை தடுத்து இருந்தால் தேவர் குரு பூஜையின் போது நடந்த கொலைகளை தடுத்திருக்கலாம் என உறுதியாக சொல்லலாம். கல்லால் அடித்து கொள்ளும் அளவிற்க்கு அவர்களது சாதி வெறி உள்ளது....

இந்த இரண்டு சாதியினரிடையே நடந்த சண்டைகளால் இறந்த்தது என்னவோ அப்பாவிகள்தன்... 
இதுவும் நடந்தது என்னவோ இந்தியவில்தான்..

மேலே கூறியன அனைத்தும் படிக்காதவர்கள் அல்லது ஓர் தெளிவான அறிவை பெறாதவர்கள் என்றே வைத்துக்கொள்வோம் ஆனால் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கல்லூரிகளில் நடக்கும் தீண்டாமைதான் என் இதயத்தை குடைகிறது.
அதுவும் AIIMS  எனப்படும் மருத்துவ கல்லூரியில் முதல் நாளில் இருந்து ஆரம்பிக்கும் தீண்டாமையை ஆரம்பித்து வைப்பது அந்த நிறுவனத்தின் ஆசிரியர்கள் தான் என்பது நம்ப முடியாத உண்மை...
அங்கு சாதி கொடுமையால் இறந்தவர்களின் விபரம்  “THE DEATH OF MERIT” என்னும் இனையதளத்தில் மிக தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது
மேலும் பல மத மற்றும் சாதி கலவரங்க்களால் பலர் நம் நாட்டிலே கொலை செய்யப்பட்டுள்ளனர். இது நம் நாட்டில் வேறு எங்கோ இல்லை. 

இதை ஏன் நாம் தட்டி கேட்கவில்லை. ஏனென்றால் அவர்கள் நம் நாட்டினர்தான் ஆனால் தமிழர்கள் அல்ல, அவர்கள் தமிழர்தான் ஆனால் நம் மதத்தவர் இல்லை, அவர் நம் மதந்தான் ஆனால் நம் சாதி இல்லை, இவ்வாறு நம் மக்கள் வேற்றுமை உணர்வோடு வாழ்கின்றனர். நீ அன்று இதனை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாம் தட்டி கேட்டிருந்தால் அவனும் வந்திருப்பான் உன் பின்னாடி இந்த இனப்படுகொலையை தட்டி கேட்க...
உனக்குள் ஓடும் வேற்றுமை உணர்வுதான் அவனுக்குள்ளும் இன்று ஓடுகிறது எனவே மாணவப்போராட்டம் தமிழக மாணவ போராட்டமாகவே உள்ளது. அது இந்திய மாணவப் போராட்டமாக வளரவில்லை...

எனவே இதுவரை தெரிந்தோ தெரியாமலோ நாம் அமைதியாக இருந்துவிட்டோம் ஆனால் இப்பொழுது இனைந்துள்ளோம் இதனை பயன்படுத்தி நாம் எந்த ஒரு தவறையையும் தேசிய தவறாக பார்ப்போம். தேசியம் என்பது கூட தவறு. மாமேதை ஐன்ஸ்டைன் போல உலகத்தில் எந்த மூலையில் வாழ்ந்தாழும் அவர்கள் மனிதர்களே என்னும் கொள்கையை உறுதியாக கடைபிடிப்போம்...

இது என்னுடைய கருத்து... இதற்க்காக எனக்கு அறிவுரை கூறுவதாகவும் அல்லது என்னை திட்டுவதாகவும் எந்த ஒரு மறுமொழியும் தெரிவிக்க வேண்டாம். ஏனென்றால் நான் எதர்க்காகவும் யாருக்காகவும் என்னை, எனது கருத்தை மாற்றிக் கொள்ளமாட்டேன்....


                                          இப்படிக்கு மனிதன்.....!