Tuesday, 29 October 2013

கவிதை



நவராத்திரி விழாவில் நான் வாசித்த கவிதை..
புரியாதவர்களுக்காய்...!





சர்க்கார்பதி, நரிக்கல்பதி மற்றும் பெருமாள்புரத்து மக்களுக்காய் நான் எழுதியது...?



 


அஞ்சுக்கும் பத்துக்கும்
அடிமையாக,
அழுக்கு கிழிசல்
உடையணிந்து..!

ஓலைக் குடிசையின்
மூலையிலே,
ஒண்டிக் கிடக்கும்
என் உறவே..?

எதற்க்கடா உழைக்கிறாய்
எவனுக்கோ,
எல்லாம் ஈனப்
பணத்திற்க்கோ..?

குனிந்தே கூனாய்
போனோமடா,
என் தோழனே..!
குடிக்க கூழின்றி
செத்தோமடா...!

தலைகள் ஆயிரம்
உருண்டதடா,
நம் தலைமுறை   
அடிமையாய்
பணிந்ததடா..?

எல்லாம் அழிந்து
போனதெங்கோ,
நம் இழிவைத்தவிர
யாவுமெங்கோ..?

காற்றை யாரும்
தடுத்ததுண்டோ..?
காட்டுத்தீயை யாரும்
அனைத்ததுண்டோ..?

புறப்படு பொறுமையை
அறுத்துவிட்டு,
தீ புயலாய் நீயும்
கொழுந்துவிட்டு..?

மானம் பெரிதென
வாழ்ந்திடுவோம்,
இல்லை மண்ணோடு மண்ணாய்
வீழ்ந்திடுவோம்..!