Monday, 22 December 2014
Tuesday, 4 November 2014
கடவுள்
Monday, 27 October 2014
மழை
கடலில் பிறந்து,
காற்றில் கலந்து,
கரையை கடந்து,
காலம் உணர்ந்து,
மலையில் ஏறி,
மனதை உருக்கி,
மண்ணை நனைக்கிறது,
இந்த மழை...!
இது எதுவுமேயில்லாமல்,
எப்படி நனைக்கிறாய்...!
என்னை நீ..!
தீப ஒளி திருநாள்
ஒவ்வொரு வேட்டுச்சத்தமும்,
உசுப்புகிறது என்னை,
உன் நினைவுகளிலிருந்து..!
உசுப்புகிறது என்னை,
உன் நினைவுகளிலிருந்து..!
உன் வாசனை
கார்மேகம் புடை சூழும்,
கடற்கரையாய் காற்றடிக்கும்,
மரங்கள் மகிழ்ச்சியாய் ஆடும்,
பறவைகள் பறந்து பாடும்,
மலர்கள் மழையென பொழியும்,
மழைத்துளி மலரென தூவும்,
இடையில் ஓர் வாசனை,
என் உயிரை குடிக்கும்,
ஆம்,
இது மண்வாசனை அல்ல..!
உன் வாசனைதான்..!
கடற்கரையாய் காற்றடிக்கும்,
மரங்கள் மகிழ்ச்சியாய் ஆடும்,
பறவைகள் பறந்து பாடும்,
மலர்கள் மழையென பொழியும்,
மழைத்துளி மலரென தூவும்,
இடையில் ஓர் வாசனை,
என் உயிரை குடிக்கும்,
ஆம்,
இது மண்வாசனை அல்ல..!
உன் வாசனைதான்..!
உன் வாசனை
சந்தனத்தின் வாசனை கர்வம்,
சல்லி சல்லியாய் நொருங்கியது..!
நெற்றியில் நீ வைத்ததால்..!
சல்லி சல்லியாய் நொருங்கியது..!
நெற்றியில் நீ வைத்ததால்..!
பட்டாசு
பட்டாசு
பற்றவைத்துவிட்டு,
ஓட்டம் எடுக்கிறாய்
நீ..
வெடித்து சிதறுகிறது,
என் இதயம்..
காதல் மழை
மழைத்துளிகள் மொய்ப்பதாய்
உன் மான்விழிகள்
என்னை மொய்க்க
உடல் நனையாமல்
உள்ளம் மட்டும்
நனைகிறது
-“காதல் மழை"
காதலின் கரு
கதிர்வீச்சு,
கருவினை கலைக்குமாம்...!
உன் கண்களின்
கதிர்வீச்சோ,
என்னை கருவுறச்செய்திருக்கிறது..!
நம் காதலினை...!
Friday, 10 October 2014
"எனது இரவுகள்"
நட்ட நடு இரவில்
விழித்து கொள்கிறேன்,
எழுந்து, எவரும் அறியாமல்
வெளிவருகிறேன்,
ஆடை துவைக்கும் கல்லில்
அமைதியாய் அமர்கிறேன்,
முதல் உன் நினைவுடன்
உறவாடுகிறேன்,
பின் நிலவுடன்
உறையாடுகிறேன்,
பின்
நிலா, நீ, நான் என
நிமிடங்களை நகர்த்துகிறேன்,
அந்த நிலவொளியில் நான்,
நினைவிழந்தவனாய்,
நிறைய சிரிப்புகளுடன்..!
அடுத்த வீட்டுக்காரனோ அதிர்ச்சியில்..!
அரைகிறுக்கனோ என..?
நிலவுக்கு சில நாட்கள்
விடுப்பு உண்டு,
உன் நினைவுக்கோ..!
ஓர் நாளும் இல்லை,
இப்படியாய் எனது இரவுகள்,
தனிமையை சாகடித்து,
தன்னை சாந்தபடுத்தி கொள்கின்றன..
- மு.துரை
விழித்து கொள்கிறேன்,
எழுந்து, எவரும் அறியாமல்
வெளிவருகிறேன்,
ஆடை துவைக்கும் கல்லில்
அமைதியாய் அமர்கிறேன்,
முதல் உன் நினைவுடன்
உறவாடுகிறேன்,
பின் நிலவுடன்
உறையாடுகிறேன்,
பின்
நிலா, நீ, நான் என
நிமிடங்களை நகர்த்துகிறேன்,
அந்த நிலவொளியில் நான்,
நினைவிழந்தவனாய்,
நிறைய சிரிப்புகளுடன்..!
அடுத்த வீட்டுக்காரனோ அதிர்ச்சியில்..!
அரைகிறுக்கனோ என..?
நிலவுக்கு சில நாட்கள்
விடுப்பு உண்டு,
உன் நினைவுக்கோ..!
ஓர் நாளும் இல்லை,
இப்படியாய் எனது இரவுகள்,
தனிமையை சாகடித்து,
தன்னை சாந்தபடுத்தி கொள்கின்றன..
- மு.துரை
Tuesday, 9 September 2014
கோவில்
இருக்கிறதா இல்லையா
என்பதற்க்கு
இதுதான் தொடக்கம்
இல்லை என்போருக்கு
என்பதற்க்கு
இதுதான் தொடக்கம்
இல்லை என்போருக்கு
பணம் கடவுளாய் மாறிப்போன
எல்லோர் வீட்டிலும்
இறைவனுக்கு இடமிருக்கையில்
இறைவன் வீட்டிலோ
இருப்பவனுக்குத்தான் இடமிருக்கிறது
இருக்கிறவனுக்கு கிட்டப் பார்வை
பிச்சைகாரனுக்கு சில்லரை சத்தம்
மனிதன் உள் நுழைகிறான்
தன் நிலமையை சாந்தபடுத்த
-இந்த கோவில்
Tuesday, 24 June 2014
Wednesday, 26 March 2014
சிவகாமி
என் அம்மாவை,
பெறவில்லை என்றாலும்,
ஆகிப் போனாய்,
போதும் நில் என்றே,
எல்லோரும்,
என்னை பொறுக்கச் சொன்னார்கள்
வாசலிலே,
நீதான் அழைத்தாய்...!
போதும் வாடா என்றே
உன் பூஜை அறை
வரையினிலே...!
வரையினிலே...!
எல்லோர்
வீட்டுக்குள்ளும்,
என் காற்றுக்கே
தடை இருக்கையில்,
தடை இருக்கையில்,
என் கால்களையும்,
தடை செய்யாத ஒருத்தி,
நீதானே..!
கோழியும் திங்காத
ஒர் உணவினை,
ஒர் உணவினை,
கொட்டிச் செல்வார்கள் எல்லோரும்,
கோடு கோடாய்
கிழிந்த இலையிலே,
கிழிந்த இலையிலே,
நீயோ,
கோழிக் குழம்பையும்,
எனக்களிப்பாய்,
உன் கோணல் விழாத
புது தட்டினிலே..!
நீதான் எரிகிறாய்,
என தெரியாமல்,
நடு நிசியில் ,
நான் கடந்து வந்தேன்
சுடுகாட்டை..?
சுற்றத்தார் சொன்னதும்,
சுறுங்கிய இதயம்,
விரியவில்லையே,
சில நொடிகள்..!
சில நொடிகள்..!
எங்கே சொல்லுவேன்..?
எனக்கிறுந்த ஒரே சொந்தமும்
எரிந்து போனதே,
அந்த தீயிலென்று...?
அந்த தீயிலென்று...?
என் பெயர்,
யார் சொல்லியும்,
அவ்வளவு இனிமையாயில்லை,
நீ சொல்லும்,
அந்த,
மூத்தர பாண்டிக்கு(மு.துரை பாண்டியன்)
இனையாக...!
ஒருமுறை வந்து
சொல்லிப்போ
எனக்காக...!
இரு நூறு வீடுல்ல,
அந்த ஊரில்,
இரண்டே சமையலறையே..?
ஒன்று என் வீடு,
மற்றொன்று
உன் வீடு,
மன்னிக்கவும் நம் வீடு...!
Tuesday, 18 March 2014
கவிதை
எனக்கு அவள் இமையும்,
அவளுக்கு என் இமையும்,
ஒரே ஒரு
உடையாகிப்போக ,
உரித்திட துணிந்தோம்
அவைகளையும்....!
அவளுக்கு என் இமையும்,
ஒரே ஒரு
உடையாகிப்போக ,
உரித்திட துணிந்தோம்
அவைகளையும்....!
Subscribe to:
Posts (Atom)




.jpg)




