Thursday, 23 June 2016

உன் அழகு

கண்ணாடியில் தேடாதே
என் கவிதைகளில் கிடக்கிறது
உன் அழகு

பார்வை

கோபப் பார்வை,
குத்துப் பார்வை,
ஓரப் பார்வை,
தூரப் பார்வை,
காதல் பார்வை,
கிண்டல் பார்வை,
சீண்டல் பார்வை
அடியே விண்மீன்களை
எண்ணத் தெரிந்தவன் கூட தோற்றுப்போவான்
உன் விழி மாற்றங்களை
எண்ணிடச் சொன்னால்

காதல்

சொல்ல முடியாத
உணர்ச்சி அலைகளால்
குணத்தை மாற்றி
அவளுக்கு குழந்தையாகவும்
அவளுக்காக மிருகமாகவும்
மாற்றுவதே!!  

இப்பொழுதெல்லாம்

இப்பொழுதெல்லாம்
என் கவிதைகளை
நானே முடமாக்குகிறேன்
உன் நினைவுகளை
உடைத்து எடுத்தே!!

விவசாயம்

வேலையில்லா வருமானத்திற்காய்,
விவசாயத்தை விட்டொழித்து,
காத்திருக்கிறோம்
கையேந்தும் நிலைநோக்கி.

இந்தக்காதலுக்கு மட்டும்

இடை மறித்து,
திசை திருப்பி,
நோகடிக்கும் வேலையெல்லாம், கைவந்த கலைபோல
இந்தக்காதலுக்கு மட்டும்!

உன் நினைவுகள்

ஆறடி சுவர்
அதிர குரைக்கும் நாய்
அடைத்து வைத்த கதவு
அத்தனையும்  தாண்டிவந்து
அமைதியாய் திருடுகிறது தூக்கத்தை!

வேகத்தடைகள்

பின் இருக்கையில்
பின்னிக்கொண்டு 
நீ அமரந்திருக்க எண்ணிக்கொண்டிருக்கிறேன்
எந்த வழியில்
எத்தனை வேகத்தடைகளென!

என்னுடைய நிலா

எத்தனை விண்மீன்களை
எண்ணித் தீர்ப்பேனோ!
அந்த ஒரு நிலவை
அடையாளம் காணும்வரை!

கனவினில் நுழைந்திட

நள்ளிரவில்,
நீயும் நானும்,
நேருக்கு நேர்
கடந்து செல்கிறோம், கவனிக்காமல்!
நீ என் வீட்டிற்கும்,
நான் உன் வீட்டிற்கும்,
கனவினில் நுழைந்திட!