Wednesday, 15 February 2012

தமிழ் கவிதைகள்

                                                                                                                                                                                                                                                                                                  சாதி வெறி

காலங்கள் ஓட ஓட
கயவனும்
குயவனாய்
மாறுகின்றான்

தாயின் கருவறையில்
துவங்கி
அவன் கல்லரையிலும்
முடிவதில்லையே
இந்த சாதி………..




சாதி என்பது

சமுதாயத்தின்
எதிரி !
சமச்சீரின்
அழிவு !

வளருகின்ற
இளைஞனின்
நெஞ்சை முறிக்கும்
 சாதி?

வகுப்பரையிலும்
நுழைந்து பலரை
வருந்த வைப்பது
 ஏனோ?

மலர் வாங்க
போனாலும்
சாதி மல்லி
வேண்டும்

மனம் முடிக்க
போனாலும்
சாதிப்பெண்
வேண்டும்


சாதி சாதி
என
கவி பாடும்
மனிதா !

உன் உள்ளத்தில்
சாதி வெறி
ஒழிய?

எங்கள்
  உயிர்தான்
மருந்தென்றால்?

உடனே வா
உன்னால்
முடிந்த உயிரைக்
குடி!

ஏனென்றால் ?
    ஒரு கோடி
     ஏழைகள்
     நாங்கள்!


தமிழ் கவிதை

ஆயிரக்கணக்கில் திரிந்தேன்
               அடித்து விரட்டினாய்!
அனாதையாய் திரிகிறேன்
               அதிசயம் என்கிறாய்!
              
                         -சிட்டுக்குருவி