Saturday, 28 April 2012

தமிழ் கவிதை

மார்பெங்கும்
வண்ண மலர்
வைத்து மறைத்தாலும்

மங்கை உந்தன்
அழகிற்கு
 ஈடாகவில்லை

"அந்த மலைகளின் அரசி"

தமிழ் கவிதை

அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்

Wednesday, 18 April 2012

தமிழ் ஈழம்

           தமிழ் ஈழம்


சூரிய வெப்பத்தால்
பனி உருகி
கடல் நீர்
அதிகரிக்கிறது
 -அறிஞர்கள் சொன்னார்கள்

அடக் கொடுமையே...! 
எனக்குத்தானே
தெரியும்  அது
என்னவர்கள் விட்ட
கண்ணீர் என்று....

-"வருத்ததுடன் தமிழ் ஈழம்"

Thursday, 5 April 2012

தமிழ் கவிதை

மழையில்,

எங்கே
குடை பிடிப்பது 
என தெரியாமல் 
தவிக்கிறேன்....

அவசரப்பட்டு 
சுவர் முழுவதும்
எழுதியதால்....

-"என்னவள் பெயரினை"

by 
dinesh raj

Wednesday, 4 April 2012

தமிழ் கவிதை

தினந்தோரும்
ஆயிரம் பொய்
சொல்லும்
என் இதழ்கள்

இரு வரிகள்
பேச மறுக்கிறது

என்னவள்
கண்களை நோக்கி..!!

by 
dinesh raj

தமிழ் கவிதை

கடண்
 வங்கியவனை
போல
தவிக்கிறேன்

என்னவள்
கண்களில்
படும்
போதெல்லாம்

by 
dinesh raj

தமிழ் கவிதை

காதலை சொல்ல
 துணிந்து வந்த
என் கால்கள்
     திரும்பின

அன்பே
உன் கண்களை
 பார்க்க முடியாமல்!!!

by
dinesh raj

Monday, 2 April 2012

தமிழ் கவிதை

ஆயிரம் மலர்கள்
அணி வகுக்கின்றன
ராஜ மரணத்தை
அடைய
-"தினந்தோரும் 
என்னவள் வாசலில்"