Sunday, 30 August 2015

வன்கொடுமை

ஒருத்திக்கு ஒருவன்
எழுதியிருந்தது
அந்த சிவப்பு விளக்கு வீட்டில்

ஊர் சுற்றல்

ஊர் சுற்ற ஆசையடி பெண்ணே
இதழை உணவாக்கி
இடைவெளியை தூரமாக்கி
உன்னோடு
ஊர் சுற்ற ஆசையடி பெண்ணே

திருவிழா

திருவிழாக்கள்
தெய்வத்தின் ஊர்வலத்திற்கா..?
இல்லை
தேவதைகளின் ஊர்வல்த்திற்கா..?

மின்வெட்டு

மின்வெட்டு தூண்டிவிட்டு
செல்கிறது
அபாயகரமான கொசுக்களையும்
ஆண்மகன்களின் கெஞ்சல்களையும்

உன் நினைவில்

மின்வெட்டின் இருட்டில்
மெழுகுவர்த்தி இருந்தும்
எரிக்காமல்
எரிந்து கொண்டிருக்கிறேன் நான்
உன் நினைவுகளால்

அரசியல்

இருந்தும் இல்லாமல்
போகிறது
அமவாசை நிலவும்
அடி பனியாதவனின்
திறமையும்

உறக்கம்

உருண்டு, பிறண்டு
மடக்கி, நீட்டி
எப்படியும் உறங்கமுடியவில்லை
உன் நினைவுகளை தாண்டி
என்னால்..!

கார்மேக கண்கள்

கார் மேகமும்
அவள் கண்களும் ஒன்றேதான்

என் மேல் பொழியும்
என்றிருக்கையில்
எங்கோ பொழியும்

எங்கோ பொழியும்
என்றிருக்கையில்
என் மேல் பொழியும்

பிரிவுகள்

எத்தனை எத்தனை பிரிவுகள்
மானிடத்தில்
என்றென்னி
என்னை பிரித்திட நினைத்தேன்
அதிலிருந்து
ஏனோ என்னையும் ஒரு பிரிவாக்கி
எதிர்க்க தொடங்கின
எல்லா பிரிவுகளுமே..

பூமித்தாய்

அவள் உச்சந்தலையில் விழுந்து
ஓயாது உடலில் ஓடி
ஒவ்வொரு இடமாய் தொட்டு
வளைவில் வளைந்து
சுழியில் நெழிந்து
மேட்டிலே ஏறி
பள்ளத்தில் இறங்கி
மலரடியில் விழும்போது
மழைத்துளிகள் கூறின
கடல் நீர் எங்கள்
காதலின் கண்ணீரே என..
பூமித்தாய் அவளிடம்..!

சர்க்கரை வியாதி

இருமுறை எச்சில் வைத்து
எதையும் பருகாதே
சத்தியமாய் வாய்ப்பிறுக்கிறது
சர்க்கரை வியாதி வர

திருட்டு

நான் எத்தனையோ முறை திருடியும்
குறையவே இல்லை
அவள் அழகு..!

இதழ் முத்தம்

முதல் முத்தம்
இதழ் முத்தமாய் கேட்டு
முழு அடைப்பு போராட்டம்..

தேநீர்

நீ கடந்து செல்லும் அழகில்
காணாமல் போகிறது
கல்லூரித் தேநீரின் சுவை..!

Monday, 2 February 2015

முத்த உடன்படிக்கை


வறண்டு போன 
வயல் நிலமாய்,
வரி விழுந்து
கிடக்குதென் உதடு,..

வான் மேகமாய் 
வந்து விடு,
வறட்சி இல்லா
உன் உதடெடுத்து..!

வாங்கியும் வழங்கியும்
வளர்த்து கொள்வோம்,
வளமை கொண்டதாய்
நம் காதலையே..!


Saturday, 3 January 2015

தமிழ் கவிதை

காலத்தின் அலைகள்
என் காலடியிலிருந்து
கருப்பு முடிவரை
எல்லாம் அரித்து செல்கிறது
ஏனோ உன் நினைவுகளைத்தவிர..!