அனைவருக்கும் வணக்கம், நான் இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை ஓசை அமைப்பின் ஒரு
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரம் கிடைத்தது. அந்த நிகழ்ச்சி ஆரம்பித்து
ஒரு ஒரு மணி நேரம் தாமதமாக நிகழ்ச்சி நடந்த இடத்திற்க்கு சென்றேன், அங்கு
சென்றதும் ஒரே அதிர்ச்சி. எனக்கு முன் அங்கு 100 பேர் வந்திருந்தனர், நான்
101ஆவது ஆள், அதில் சிறுவர் முதல் பெரியவர் வரை அடங்குவர், அத்தனை பேரும்
எழுந்து தங்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர், இது போன்ற
கூட்டத்தில் நான் இதற்க்கு முன் கலந்து கொண்டதில்லை, நான் அமைதியாக அவர்கள்
உரையாடல்களை கேட்டு கொண்டிருந்தேன், கடைசியாக ஓசை அமைப்பின் தலைவர் ஒரு
சிறந்த திட்டத்தை பற்றி சொன்னார், அதில் நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக்
பைகளை எப்படி ஒழிக்க முடியும் என விளக்கினார், நாம் வாங்கும் ஒவ்வொரு
பொருளிளும் பிளாஸ்டிக் இன்று வந்து விட்டது, எனவே நாம் பிளாஸ்டிக்கில் உள்ள
பொருளை உபயோகம் செய்துவிட்டு அந்த வெறும் பிளாஸ்டிக் பைகளை சேகரித்து அதனை
அந்த நிறுவனத்திடம் கொடுத்து அதற்காக அவர்களிடம் இருந்து பணம்
பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு நிறுவனமும் அதன் முத்திரையை அந்த பைகளில்
அச்சிடுவதை கட்டாயமாக்கினால் இந்த வேலை எளிதாக முடிந்துவிடும். நிறுவனங்கள்
உறுவாக்கிய பிளாஸ்டிக்கை அதே நிறுவனம்தான் ஒழிக்க வேண்டும் என்கிற
நிர்பந்தம் உண்டாகும், நமது மக்களும் அதனை தனியாக சேகரிக்க தொடங்குவர்,
இதன் மூலம் மக்கும் கழிவுகளுடன் பிளாஸ்டிக் சேர்வதை எளிதாக தடுக்கலாம்,
உதாரணமாக நாம் ஒரு ஸாம்புவை வாங்குகிறோம் எனில், அதனை நாம் உபயோகம்
செய்துவிட்டு வெறும் பிளாஸ்டிக் பையை கொண்டு சென்று எந்த நிறுவனத்திடம் அதை
வங்கி வந்தோமோ அதே நிறுவனத்திடம் கொண்டு சென்று எனக்கு ஒரு பைக்கு ரூ 10
பைசா வீதம் மொத்தமாக எனக்கு தாருங்கள் என்றால் அந்த நிறுவனம் அதற்கான
விலையை கண்டிப்பாக தர வேண்டும், இதுவே அந்த திட்டம் ஆகும். இதன் மூலம்
பிளாஸ்டிக் கழிவுகளை எளிதில் பிரித்திட முடியும் என அவர் விளக்கினார். இது
மிகவும் நல்ல திட்டமாக எனக்கு தோன்றியது, இதனை செயல்படுத்த ஒரு அறிவிப்பே
போதுமானது ஆனால் நமது அரசியல்வாதிகள் இதை வைத்து அந்த நிருவனங்களிடம்
எப்படி பணம் பறிப்பது என்றே யோசிப்பார்கள், அது வேறு விடயம், ஆனால்
இத்திட்டம் நிறைவேராவிட்டாலும் நாம் நினைத்தால் முடிந்த அளவிற்க்கு
பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்கலாம், எனவே தோழர்களே முடிந்த அளவிற்க்கு
பிளாஸ்டிக் உபயோகம் செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள்..
நன்றி..
http://www.greenosai.org/
அமைப்பின் தலைவர் காளிதாஸ் அவ்வளவு எளிமையாக நம்முடன் பழகுகிறார்..
மேலும் பல தகவல்களுக்கு அவரை தொடர்பு கொள்ளுங்கள்....
நன்றி..
http://www.greenosai.org/
அமைப்பின் தலைவர் காளிதாஸ் அவ்வளவு எளிமையாக நம்முடன் பழகுகிறார்..
மேலும் பல தகவல்களுக்கு அவரை தொடர்பு கொள்ளுங்கள்....
No comments:
Post a Comment