Tuesday, 11 September 2012

என் காதல்

          என் காதல்

காதலிக்க ஆசைதான்..!
பெண்ணே
உன் போல்
அழகியை
காதலிக்க ஆசைதான்...!

"அழகிய கண்கள்,
அதிசய இதழ்கள்,
ஒளிரும் மேனி,
ஓடும் கால்கள்,
உதிறும் சிரிப்புகள்,
உறைய வைக்கும் பேச்சுக்கள்",
அத்தனையும்...!
காதலிக்க ஆசைதான்
பெண்ணே...?

ஆயினும்
மறந்துவிடு என
மணி அடிக்கிறது
மல்லிகையே
உன் உயர் ஜாதி....!
        
                 -மு.துரை பாண்டியன்

No comments:

Post a Comment