Thursday, 18 October 2012

புதிய பாரதம்

எத்தனை எத்தனை
உயிர்கள் மாய்ந்தனவோ..
அன்னியர்களை விரட்டி
அடிமை தலையை உடைக்க..
இவ்வீர மண்ணில்...

அத்தனையும் வீண் ஆனதே...
வாக்குரிமையை நிறைவேற்ற
நீர் வாங்கும் அந்த
வாயில்லா பிசாசினால்

காசினை வாங்கி காரியம் செய்கிறாய்
கயவன் வென்றவுடன்
காண்பதையெல்லாம் திருடுகிறான்

உண்மையாய் போட்டிருந்தால்..
உலக்கையால் அடித்து
கேட்டிருக்கலாம்
நியாயத்தை...

அறிந்தும் அறியாதவனாய்
தெரிந்தும் தெரியாதவனாய்
விலகுகிறோம்...
அவனை....
வாங்கி விட்டோமே என்று...


பாஞ்சாலியை பறிகொடுத்த
பாண்டவர்களாய்
விலகி நிற்க்கிறோம்
பாரத தாயை பறிகொடுத்து...

அரசியல் என்னும்
அநியாய சாக்கடையில்
அமுக்கி விட்டோம்
அத்தனை உயிர்களின்
தியாகத்தை...

விழித்து எழுவோம்
இனிமேலாவது..

தலை நிமிர்வோம்..
தலை குனியச் செய்யும்
காசினை வேண்டாம் என்று...

சாக்கடை அரசியலை
மாற்றிடுவோம்
சத்திய அரசியலாக..

படைப்போம்
"புதியதோர் பாரதம்"

No comments:

Post a Comment