Tuesday, 9 September 2014

கோவில்

இருக்கிறதா இல்லையா
என்பதற்க்கு
இதுதான் தொடக்கம்

இல்லை என்போருக்கு
செல்லுமிடமெல்லாம் பிரச்சினை
இருக்கு என்போருக்கோ
இடம்தான் இங்கே பிரச்சினை

பணம் கடவுளாய் மாறிப்போன
இவ்வுலகில்
கடவுளும் பணமாக தயங்கவில்லை

எல்லோர் வீட்டிலும்
இறைவனுக்கு இடமிருக்கையில்
இறைவன் வீட்டிலோ
இருப்பவனுக்குத்தான் இடமிருக்கிறது

இருக்கிறவனுக்கு கிட்டப் பார்வை
இல்லாதவனுக்கு எட்டப் பார்வை

பிச்சைகாரனுக்கு சில்லரை சத்தம்
பூணூல்களுக்கு கட்டுகள் மொத்தம்

மனிதன் உள் நுழைகிறான்
தன் நிலமையை சாந்தபடுத்த
கடவுள் வெளிவருகிறார்
ஊர் நிலமையை கலவரப்படுத்த

எல்லாம் இருப்பவனுக்காய் இருந்தாலும்
இல்லாதவனுக்காய் இருக்கிறது
ஏழைகளின் திருமண் மண்டபமாய்
-இந்த கோவில்

No comments:

Post a Comment