Wednesday, 26 March 2014

சிவகாமி

நீ,
என் அம்மாவை,
பெறவில்லை என்றாலும்,
"என் அம்மாயீ"
ஆகிப் போனாய்,
உன் அன்பினாலே...!

போதும் நில் என்றே,
எல்லோரும்,
என்னை பொறுக்கச் சொன்னார்கள்
வாசலிலே,

நீதான் அழைத்தாய்...!

போதும் வாடா என்றே
உன் பூஜை அறை
வரையினிலே...!

எல்லோர்
வீட்டுக்குள்ளும்,
என் காற்றுக்கே
தடை இருக்கையில்,

என் கால்களையும்,
தடை செய்யாத ஒருத்தி,
நீதானே..!

கோழியும் திங்காத
ஒர் உணவினை,
கொட்டிச் செல்வார்கள் எல்லோரும்,
கோடு கோடாய்
கிழிந்த இலையிலே,

நீயோ,
கோழிக் குழம்பையும்,
எனக்களிப்பாய்,
உன் கோணல் விழாத
புது தட்டினிலே..!

நீதான் எரிகிறாய்,
என தெரியாமல்,
நடு நிசியில் ,
நான் கடந்து வந்தேன்
சுடுகாட்டை..?

சுற்றத்தார் சொன்னதும்,
சுறுங்கிய இதயம்,
விரியவில்லையே,
சில நொடிகள்..!

எங்கே சொல்லுவேன்..?
எனக்கிறுந்த ஒரே சொந்தமும்
எரிந்து போனதே,
அந்த தீயிலென்று...?

என் பெயர்,
யார் சொல்லியும்,
அவ்வளவு இனிமையாயில்லை,

நீ சொல்லும்,
அந்த,
மூத்தர பாண்டிக்கு(மு.துரை பாண்டியன்)
இனையாக...!

ஒருமுறை வந்து
சொல்லிப்போ
எனக்காக...!

இரு நூறு வீடுல்ல,
அந்த ஊரில்,
இதுவரை நான் நுழைந்தது
இரண்டே சமையலறையே..?

ஒன்று என் வீடு,
மற்றொன்று
உன் வீடு,
மன்னிக்கவும்
நம் வீடு...!

No comments:

Post a Comment